இலங்கையிலும் ஈரான் மீதுதான தடைகளின் தாக்கம்
ஈரானுக்கு மேலும் தடைகள் ஏற்படுத்தப்படுமாயின் அதன் தாக்கம் இலங்கையிலும் காணப்படும். எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைக் கடன்களைப் பெற்றுக் கொள்வது குறித்து அரசு தீர்மானிக்கவில்லை என்று அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடி பணியப் போவதில்லை. புதிய பொருளாதார மற்றும் நிதி நிர்வாக வியூகங்களையே அரசு கையாளுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து எஞ்சிய கடன் தவணைகளை பெற்றுக் கொள்வது குறித்து அரசாங்கம் இது வரையில் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை. மேற்குலக நாடுகள் பொருளாதார நெருக்கடிகளில் உள்ளன. அவற்றுக்கு முகம் கொடுக்கும் வகையிலேயே உள்நாட்டின் வியூகங்கள் காணப்படுகின்றன.
ஈரானில் தற்போது காணப்படும் சூழ்நிலைகள் காரணமாக மேலதிக தடைகள் விதிக்கப்படுமாயின் அதன் தாக்கம் இலங்கைக்கும் ஏற்படும். இதனால் உள்நாட்டில் எரிபொருள்களின் விலையேற்றம் காணப்படும் எனக் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply