காணி பொலிஸ் அதிகாரங்கள் நாட்டை துண்டாடுவதாக அமையாது
காணி, பொலிஸ் அதிகாரங்களுடனான 13வது அரசியலமைப்பு திருத்தத்தை இனப்பிரச்சினைக்குத் தீர்வாக வழங்கினால் அது நாட்டைத் துண்டாடுவதாக இருக்காது. இதையிட்டு சிங்கள மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய விஷேட செவ்வியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் பேசும் மக்களுக்கு 13வது அரசியலமைப்புத் திருத்தம் சிறந்த தீர்வாக இருக்கும். இதில் குறைபாடுகள் இருப்பதாக அரசோ அல்லது கட்சிகளே கருதினால் அதை 13 பிளஸ் மூலம் நிவர்த்தி செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது;
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் 13வது அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் இந்தியாவில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளிலும் இலங்கையை விட சிறிய நாடான சுவிட்சர்லாந்திலும் இதேபோன்று அதிகாரப் பகிர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அந்த நாடுகள் பிரிந்து விடவில்லை.
காணி, பொலிஸ் அதிகாரங்கள் 13வது அரசியலமைப்பு திருத்தத்தின்படி மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டாலும் அதனால் ஒரு பிரச்சினையும் ஏற்படாது. அப்படி பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை சட்டப்படி கட்டுப்படுத்தும் வழிறைகளும் 13வது அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவதால் நாடு துண்டாடப்பட்டுவிடுமென பேரின வாத சிங்களக் கட்சிகள் தெரிவிப்பதில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply