பிரபாகரன் தமிழீழத்தைத் தவிர வேறு எதனையும் சிந்திக்கவில்லை

சமாதானத்தை ஏற்படுத்தக் கூடிய பல சந்தர்ப்பங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திக் கொள்ளவில்லை என விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு நேர் காணல் வழங்கியுள்ளார்.
மும்மொழித் தேர்ச்சி காரணமாக புலிகள் தம்மை ஊடகப் பேச்சாளராக தெரிவு செய்தனர். புலிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு முன்னர் ஆசிரியராக கடமையாற்றியிருந்தேன்.

1989- 1990 களில் கொழும்பில் கே.ஜீ. இன்டஸ்றீஸ் என்னும் நிறுவனத்தில் கடமையாற்றினேன். தமிழ்ச்செல்வனே என்னை வழி நடத்தினார். பிரபாகரனுடன் தொடர்புகளைப் பேணவில்லை.

புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக தமிழ்ச்செல்வன் கடமையாற்றிய போதிலும், தீர்மானம் எடுக்கும் முழு அதிகாரமும் பிரபாகரனிடமே காணப்பட்டது. எந்தவொரு தீர்வுத் திட்டத்தையும் பிரபாகரன் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

தமிழீழம் ஒன்றை அமைப்பதனைத் தவிர பிரபாகரன் வேறு எதனையும் பற்றி சிந்திக்கவில்லை. வெள்ளைக் கொடி ஏந்தி வந்தவர்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை.

என்னுடன் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இராணுவத்திடம் சரணடைந்தார்கள்.

இந்தநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வினை எட்ட முன்வர வேண்டும் என தயா மாஸ்டர் தெரிவித்துள்ளதாக அந்தப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply