இலங்கையுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்த உகந்த நேரம்

இலங்கையுடன் நெருக் கமான தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு தகுந்த காலம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க கொங்கிரஸ் உறுப்பினர்கள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் தெரிவித்துள்ளனர்.

மூன்று தசாப்தகால பயங்கரவாத சூழல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நாட்டை முன்னேற்றிச்செல்வதற்கான சந்தர்ப்பம் இலங்கைக்குத் தோன்றியிருக்கும் நிலையில், இலங்கையுடனான நட்புறவுகளைப் பலப்படுத்துவதற்கு அமெரிக்காவுக்கு சந்தர்ப்பம் தோன்றியிருப்ப தாக காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளைச் சேர்ந்த 11 காங்கிரஸ் உறுப்பினர்கள் இணைந்து கையொப்பமிட்டு, பராக் ஒபாமாவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர். இந்தக் கடிதத்திலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அமெரிக்க அரசாங்க நிர்வாகம் கவனம் செலுத்து, இலங்கையுடன் தொடர்புகளைப் பலப்படுத்த வேண்டும். பல தசாப்தங்களின் பின்னர் அமெரிக்காவுக்கு நல்லதொரு சந்தர்ப்பம் தோன்றியுள்ளது.

இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு, நாடு பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைந்துவருகிறது. இந்த நிலையில் இலங்கை பல்வேறு அமெரிக்க கம்பனிகளுடன் பேச்சுவார்த் தைகளை ஆரம்பித்துள்ளது என்றும் அமெரிக்க ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு உறவுகள் மற்றும் பாதுகாப்பு நிலைமையைப் பேணி இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கான பாதுகாப்பு பயிற்சிகளை அளிப்பதில் இணைந்து செயற்படுவது போன்ற விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்து, வடக்கின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் அரசாங்கத்தின் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்த நேரடி நிலைமைகளைப் பார்வையிட்டிருந்த காங்கிரஸ் உறுப்பினரான ஜக் கிங்ஸ்டன் உள்ளிட்ட 11 காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply