பஸ் வேலை நிறுத்தம் செய்தால் மானியம் அனுமதிப்பத்திரம் இரத்து

எரிபொருள் விலை மறுசீரமைப்புக்கு அமைவாக அரசாங்கம் மானியம் வழங்குவதாக உத்தரவாதம் அளித்துள்ள போதும் தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் குதிப்பது நியாயமற்றது.

அதனையும் மீறி தமது பணியை பகிஷ்ரிப்போருக்கு எவ்வித மானியமும் வழங்கப்படமாட்டாதென தனியார் போக்குவரத்து துறையமைச்சர் சி.பி. ரத்நாயக்க தெரிவித்தார்.

தனியார் பஸ் உரிமையாளர்கள் தொடர்ந்தும் பணி பகிஷ்கரிப்பை முன்னெடுப்பார்களாயின் அவர்களது வீதி அனுமதிப்பத்திரத்தை ரத்துச் செய்யும் அதிகாரத்தினை பிரயோகிக்க வேண்டிய தேவை ஏற்படலாமெனவும் அமைச்சர் அழுத்தமாக கூறினார்.

டீசல் விலையதிகரிப்புக்கு ஏற்ப தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு மானியம் வழங்குவதற்கு திறைசேரி இணைக்கம் தெரிவித்துள்ளது. விரைவில் இம்மனியங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் திறைசேரி முன்னெடுத்து வரும் நிறையில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவது நியாயமற்றது.

அதனையும் மீறி வேலை நிறுத்தத்தில் குதிக்கும் பஸ் உரிமையாளர்களுக்கு மானியங்கள் கொடுக்கப்படமாட்டாது. இல்லையேல் அவர்களது வீதி அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்வது குறித்து யோசிக்க வேண்டி ஏற்படுமெனவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை தனியார் பஸ் உரிமையாளர், சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன, வழங்கப்படவிருப்பதாக கூறப்படும் எரிபொருள் மானியம் தமது கைகளுக்கு கிடைக்கும் வரையில் அது தொடர்பில் நம்பிக்கையில்லையெனவும் அவ்வாறு கிடைக்காமல் போனால் சங்கத்தின் தலைவரென்ற வகையில் அனைத்து பஸ் உரிமையாளர்களுக்கும் தான் பதில் கூற நேரிடுமெனவும் குறிப்பிட்டார்.

டீஸ் விலை 31 ரூபாவால் அதிகரித்துள்ளது. அமைச்சர் கூறுவதற்கு ஏற்ப பஸ் சேவையை நடத்திவிட்டு பின்னர் மானியமும் இல்லாமல் தாம் தான் நட்டத்தில் இயங்க வேண்டும்.

அப்படியானால் அரசாங்கம் முதலில் கூறுவது போன்று மானியத்தை எமக்காக ஏற்பாடு செய்த பின்னர் விலை மறுசீரமைப்பினை முன்னெடுத்திருக்கலாம். மானியம் கைகளுக்கு கிடைக்கும் வரை வேலை நிறுத்தத்தில் குதிக்கப் போவது உறுதியெனவும் அவர் நேற்று மாலை தினகரனுக்குத் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply