இலங்கை மீது அதிகரிக்கும் சர்வதேச அழுத்தங்கள்

ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான அமெரிக்கத் துணை இராஜாங்கச் செயலாளர் மரியா ஓட்டேரோ மற்றும் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் ஆகியோர் நேற்று கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய சந்திப்பின்போது அமெரிக்காவின் இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்றம் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை பொறிமுறையை ஸ்தாபிக்க வேண்டும் என்று கோரியுள்ளது

இது தொடர்பான தீர்மானம் ஒன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழு பரிந்துரைத்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளிடம் கோரப்பட்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசு நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும் என்பதில் அமெரிக்கா அக்கறையுடன் இருப்பதாகவும் அமெரிக்க இராஜதந்திரிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய சந்திப்பில் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்

கடந்த 9 ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையின்படி மியன்மார், ஈரான், சிரியா மற்றும் இலங்கை ஆகியவை தொடர்பில் விவாதங்கள் நடத்தப்படவேண்டும் என்பதற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் தமது ஆதரவை வெளியிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply