இந்திய அரசின் வீட்டுத் திட்ட உதவியில் கிழக்கில் 4000 வீடுகள்

இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு 4000 வீடுகள் ஒதுக்கப் பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகருக்கும் முதலமைச்சருக்கும் இடையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த இணக்கம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிணங்க சுமார் 3000 வீடுகளை அமைப்பதற்கான நிதியினை நேரடியாக பயனாளிகளிடம் ஒப்படைத்து வீடுகளை நிர்மாணிக்கப்படும். ஏனைய 1000 வீடுகளை இந்திய அரசு நிர்மாணித்து கொடுக்கும் எனவும் தெரிவித்தார்.

ஒவ்வொரு வீடும் தலா 550,000 ரூபா பெறுமதி வாய்ந்ததாகும் என அவர் குறிப்பிட்டார். இதனை கண் காணிப்பதற்காக தனது தலைமையிலான ஒரு கட்டுப்பாட்டுக் குழுவினை நியமித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply