மேற்குலக நாடுகளுடன் இணக்கத்துக்கு தயாராகும் இலங்கை அரசு
இலங்கை அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாசினை அமுல்படுத்துவது குறித்து தனது விருப்பத்தை தெரிவிக்கவும் நல்லிணக்கத்தை முன்னெக்கவும் பொறுப்புக்கூறல் மனித உரிமை மற்றும் ஜனநாயம் தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபஷவுடன் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான அமெரிக்க உதவி செயலர் மரியா ஒட்டேரோ கலந்துரையாடினார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை அமுல்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆராய்ந்து வருவதாக தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக அமெரிக்க அரசாங்கத்தின் சிரேஷ்ட இராஜதந்திரி மரியா ஒட்டேரோக்கு உறுதியளித்துள்ளார்.
2005ம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க வெளியுறவுச் செயலர் காலின் பவலுக்கு பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யும் மிக உயர்ந்த அமெரிக்க இராஜதந்திரி மரியா ஒட்டேரோ என்பது கவனிக்கத்தக்கது.
இலங்கை அரசு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் எவ்வளவுக்கு எவ்வளவு தோல்வியடைகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது மேற்குலக நாடுகளின் அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என்பதை மகிந்த தலைமையிலான அரசாங்கம் புரிந்து கொண்டுள்ளதாக தெரிகிறது. தற்போதைய கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய அதிதீவிர சிங்கள தேசியக் கட்சிகளின் திடீர் மெளனம் மகிந்த அரசு மேற்குலக நாடுகளுடன் இணக்கத்துக்கு தயாராக்கி விட்டமையை குறிகாட்டி நிற்கின்றது.
மரியா ஒட்டேரோ அம்மையாரின் உடனான ஜனாதிபதியின் சந்திப்பில் முன்னாள் இராணுவதளபதி சரத் பொன்சேகாவின் விடுதலை குறித்தும் விரிவாக பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. அவரின் விடுதலை குறித்து ஜனாதிபதி அளித்த உறுதி மொழியும் இலங்கை மேற்குலக அரசுகளுடன் முரண்பாட்டை தவிர்க்க விரும்புவதையே குறிகாட்டி நிற்கிறது.
சிங்கப்பூர் ஜனாதிபதி டொனி டான் கெங் யாமின் அழைப்பையேற்று நாளை சிங்கப்பூர் செல்லவிருக்கும் ஜனாதிபதி அவர்கள், அந்நாட்டுப் பிரதமர் லீ ஹிசின் லூங்கையும் சிங்கப்பூரிலுள்ள இலங்கை நிபுணர்களயும் சந்திக்கவுள்ளார். பூகோள அரசியல் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தா வண்ணம் புதிய வெளியுறவுக் கொள்கைகளை வகுக்க சிங்கபூர் பயணம் வழிசமைக்குமென நம்பப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply