பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னுக்கு அமெரிக்கா விருது

அமெரிக்காவின் தேசிய மனிதநேய விருதை, இந்தியாவைச் சேர்ந்த அமர்த்தியா சென்னுக்கு அதிபர் பராக் ஹுசைன் ஒபாமா வழங்கினார்.

வறுமை ஒழிப்பு கொள்கைகளுக்காக நோபல் பரிசு பெற்ற இந்திய அறிஞர் அமர்தியா சென் (78), அமெரிக்க தேசிய மனிதநேய விருதுக்காக தெரிவுசெய்யப்பட்டார்.

அமெரிக்காவில் நிலவும் வறுமை, சமூக அநீதியை தடுப்பதற்கான திட்டங்களை வகுத்து தந்ததுடன், அரசு நடவடிக்கைகளில் குறைகள், திட்டங்களை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து அமர்தியா சென் எடுத்து காட்டினார். இதுபோன்ற சிறந்த பணிகளுக்காக அவருக்கு தேசிய மனிதநேய விருது வழங்கப்பட்டது.

இதற்கான பரிசளிப்பு விழா வெள்ளை மாளிகையில் நேற்று நடந்தது. அமர்தியா சென் மற்றும் 9 பேருக்கு மனிதநேய விருதுகளை அதிபர் ஒபாமா வழங்கி கவுரவித்தார்.

அப்போது ஒபாமா பேசுகையில், இந்த மேடையில் சிறந்த பொருளாதார நிபுணர் அமர்தியாவுக்கு விருது வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்.

பொருளாதார கொள்கைக்காக 1998ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர் அமர்த்தியா சென். இப்போது அமெரிக்காவின் மிக உயரிய விருதை பெற்றுள்ளார்.

இந்த விருதை பெறும் முதல் இந்தியர் அமர்த்தியா சென் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply