எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து மன்னாரில் அமைதிப்பேரணி

எரிபொருள்களின் விலையேற்றங்களுக்கு எதிராக இன்று மன்னார் மீனவ சமாசத்தினால் முன்னெடுக்கப்பட்ட அமைதிப் பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், விநோ நோகராதலிங்கம் ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான வீ. ஆனந்தசங்கரி அவர்களும் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தின் முடிவில் மன்னார் அரசாங்க அதிபரிடம் மீனவ சமாஜத் தலைவர் முகமட் ஆலம் மகஜரைக் கையளித்தார்.

எரிபொருள் விலையை உயர்த்தாதே! மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே! அடிக்காதே அடிக்காதே கடற்றொழிலாளி வயிற்றில் அடிக்காதே! எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தி மீனவர்களை வாழவிடு! போன்ற கோஷங்கள் அமைதிப்பேரணியில் முன்வைக்கப்பட்டன.

காலை 9 மணியளவில் சமாசக் கட்டடத்தின் வாயிலிலிருந்து தொடங்கி மன்னார் அரசாங்க அதிபர் அலுவலகம் வரை மௌன ஊர்வலமாகச் சென்று அரசாங்க அதிபரிடம் மகஜரைக் கையளித்தனர்.

ஜனாதிபதிக்கு முகவரியிடப்பட்ட அந்த மகஜரில் மீனவரின் வாழ்க்கையை மட்டுமன்றி சாதாரண மக்களையும் பாதிக்கும் எரிபொருள் விலையேற்றத்தை உடனடியாகக் கைவிடுமாறும், தற்பொழுது மன்னாரில் மட்டும் அமுலில் இருக்கின்ற பாஸ் முறையை இரத்து செய்யும் படியும், இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை தடுத்து நிறுத்துமாறும் கோரப்பட்டிருந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply