இணக்க அரசியலுக்கு தயாராகும் இலங்கை அரசு (பகுதி:1)

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இலங்கையில் முற்றாக நடைமுறைப்படுத்தப்பட்ட பின், இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு மாற்றமடையும் என இலங்கைக்கான பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று அறிவித்துள்ளது தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் சட்டச்சிக்கல்கள் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. அந்தவகையில், சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கப்பெற்றதும் அவற்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் நியோமல் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாதம் சட்டமா அதிபரின் ஆலோசனைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். அதன் பின்னர் அரசாங்கம் முன்னெடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கமளிப்போம். அந்நேரத்தில் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு மாற்றமடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனைகள் கிடைப்பதற்கு முன்னர் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற முடியாது என திட்டவட்டமாக பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply