இணக்க அரசியலுக்கு தயாராகும் இலங்கை அரசு (பகுதி:2)
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலும், செனல் 4 வின் காணொளி தொடர்பிலும் விசாரணை மேற்கொள்வதற்கு விசாரணை நீதிமன்றமொன்று இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்நீதிமன்றக்குழு ஐந்து பேரைக் கொண்டதாகவும் அதிகாரம் வாய்ந்ததாக இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைக்கப்பட்டுள்ள நீதிமன்ற குழுவிற்கு, தற்போதைய கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றும் மேஜர் ஜெனரல் கிறிசாந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நீதிமன்றத்தின் முதல்கட்ட நடவடிக்கைகள் நீதவான் நீதிமன்றம் ஒன்றின் அடிப்படை விசாரணைகள் போன்று இடம்பெறும் எனவும் இரண்டாம் கட்டம் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சந்தேகம் இருப்பின் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமையும் எனவும் இராணுவத் தளபதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தகுற்ற நீதிமன்றம் போன்ற மேல் நீதிமன்றுக்கு உள்ள அதிகாரங்கள் இருப்பதால் மரண தண்டனை போன்றவைகூட வழங்கப்படுவதற்கான அதிகாரம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply