கிளி, முல்லை மாவட்டங்களுக்கு நிரந்த மின்சார விநியோகம்

வவுனியா கிளிநொச்சி மின்மாற்றுச் செயற்திட்டத்தின் மூலம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் நிரந்த மின்சாரத்தை பெறவுள்ளன. இத் திட்டமானது வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு தூதரத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இத் திட்டத்திற்கென 3000 மில்லியன் ரூபா பெறுமதியான மின்மாற்றி கிளிநொச்சி மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப் பிரதேச கைத்தொழிலாளர்கள் பெறும் நன்மையடையவுள்ளனர்.

மேலும் இத்திட்டமானது, எதிர்வரும் 2012 யூலை மாதம் நிறைவடையவுள்ளதுடன், இதன்மூலம் கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் 120,000 மக்களும் வியாபார சமூகமும் நன்மையடையவுள்ளனர். இதைத்தவிர முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் 100,000 மக்களும் நன்மையடையவுள்ளனர்.

நாட்டிலுள்ள சகல பகுதி மக்களுக்கும் மின்சார வசதி கிடைக்க வேண்டுமென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மகிந்த சிந்தனைத்திட்டத்தின் கீழ் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply