ஐந்து இலட்சம் குடும்பங்களுக்கு மண்ணெண்ணெய் நிவாரணம்
மின்சாரம் இல்லாத அனைத்து வீடுகளுக்கும் மாதம் ஒன்றுக்கு 200 ரூபா பெறுமதியான மண்ணெண்ணெய் நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு அமைய நாட்டின் தோட்டப்புறங்கள் உள்ளிட்ட சுமார் ஐந்து இலட்சம் குடும்பங்களுக்கு தற்போது அந்த நிவாரண உரிமை கிடைத்துள்ளது.
25 மாவட்டங்களின் 330 பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளடக்கி மண்ணெண்ணெய் நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கும் இந்த வேலைத் திட்டம் பெப்ரவரி 19 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் ஆரம்பிக் கப்படும் என நேற்று சமுர்த்தி ஆணையாளர் நாயக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரா விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்த மண்ணெண்ணெய் நிவாரணத்தை பெற்றுக் கொடுப் பதற்காக அரசாங்கத்திற்கு மாதாந்தம் 80 மில்லியனுக்கு மேற்பட்ட நிதி செல வாவதுடன், இது எரி பொருள் விலை அதிகரிக்கப் பட்ட பின்னர் மாதத்திற்கு செல விடப்படும் 6 லீற்றர் மண்ணெண் ணெய்க்கு மேலதிகமாக செலவிடப்படும் நிதிக்கு சமமான நிவாரணமாக அமைந்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் நாட்டில் மின்சாரமற்ற அனைத்து வீடுகளுக்கும் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த மண்ணெண்ணெய் நிவாரணம் அனைத்து பிரதேச செயலக அலுவலகங்கள் ஊடாக பெற்றுக் கொடுப்பதற்கு சமுர்த்தி ஆணையாளர் நாயக அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இவற்றிற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்றன.
சமுர்த்தி பயனாளிகளுக்கு மட்டுமன்றி மின்சார வசதி இல்லாத அனைத்து குடும்பங்களும் கிராம சேவகரின் சான்றிதழுடன் பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி அதிகார ஊடாக குறித்த நிவாரண அட்டையை பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த அட்டையை பிரதேச பலநோக்கு கூட்டுறவு நிலையம் அல்லது பிரதேச செயலாளரினால் அனுமதி அளிக்கப்படும் விற்பனை பிரதிநிதிகளின் விற்பனை நிலையங்களில் காண்பித்து குறித்த நிவாரணத்தை பெற்றுக்கொள்ள முடியும் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply