ஆர்பாட்டத்தில் கண்ணீர்ப்புகை பிரயோகம்; ஜயலத் மீது தாக்குதல்
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் புறக்கோட்டையில் ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு ஆர்பாட்டத்திற்கு பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சில ஆர்பாட்டக்காரர்கள் பொலிஸாரை நோக்கி தமது கையில் கிடைத்தவற்றை வீசி எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கண்ணீர்ப்புகை பிரயோகத்திற்கு பயந்து ஆர்பாட்டக்காரர்கள் புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு உள்ளே பிரவேசித்தனர்.
இதேவேளை, பிந்திய கிடைத்த தகவல்படி ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தலையில் அடிவிழுந்த அவர் மயங்கி விழுந்ததாகவும் ஒரு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திBoth comments and pings are currently closed.