புலிகளின் ஊரியான் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த 7 பேரின் உடல்களும் வவுனியா பூந்தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது

சனிக்கிழமை அதிகாலை இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தபோது ஊரியான் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் உயிரிழந்த 7 பேரின் உடல்களும் இன்று திங்கட்கிழமை வவுனியா பூந்தோட்டம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

3 வயது குழந்தை உட்பட இரண்டு சிறுவர்கள் அடங்கலாக 7 பேரின் உடல்களும் வவுனியா வைத்தியசாலையில் வைத்து உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு, அரச அதிகாரிகளின் உதவியோடு நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஒரே குழியில் 7 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன.

இந்த இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்வதற்காக இறந்தவர்களின் உறவினர்கள் மணிக்பாம் இடைத்தங்கல் முகாம், நெளுக்குளம் இடைத்தங்கல்முகாம் என்பவற்றில் இருந்து 35 உறவினர்கள் அதிகாரிகளினால் அழைத்து வரப்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply