தேசிய நல்லிணக்க கொள்கை விரைவில் வெளியிடப்படும்

தற்போது வரையப்பட்டுவரும் தேசிய இணக்கப்பாட்டு கொள்கை முன்மொழிவு, விரைவில் இணக்கப்பாடு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்கவினால் பொதுமக்கள் கருத்தாடலுக்காக முன்வைக்கப்படும்.

இதை முழுமனதாக ஆராய்ந்து, தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு ஏற்கப்பட்டு, விரைந்து நடைமுறைப் படுத்தப்புடும் என நான் நம்புகின்றேன் என பேராசிரியர் விஜேசிங்க டெய்லி மிரருக்கு இன்று தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் மார்ச் மாதத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை அமெரிக்கா ஆதரிக்கப்போவதாக கூறியிருப்பதைப்பற்றி கருத்துக் கூறிய பேராசிரியர் விஜேசிங்க, அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் பரப்பிவரும் இவ்வாறான ஊகங்கள், நெருக்கடி வரும்போது உணர்ச்சிவயப்பட்டு அவசரப்பட்டு உடனடியாக துலக்குவதற்கு பதிலாக ஒத்திசைவான வெளிநாட்டு கொள்கையின் பின்னணியில் இயங்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாக கூறினார்.

‘நான் அமைச்சின் செயலாளராக இருந்த போது தயாரித்த மனித உரிமைகள் வேலைத்திட்டம் இப்போதுதான் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதை அமுலாக்கும் பொறுப்பு அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடம் கொடுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும்’ என அவர் கூறினார்.

இதை போலவே எல்.எல்.ஆர்.சி அறிக்கை தொடர்பிலும் செய்ய வேண்டும். சரத் அமுனுகம அல்லது டியூ குணசேகர போன்ற ஆற்றல் மிக்க ஒரு அமைச்சரிடம் எல்.எல்.ஆர்.சி இன் சிபாரிசுகளை செயற்படுத்துப் பொறுப்பை வழங்க வேண்டுமென பேராசிரியர் விஜேசிங்க கூறினார்.
அமெரிக்காவில் வெளிநாட்டு கொள்கை, அறியாமை சண்டித்தனம் என்பவற்றை அடிப்படையாக கொண்டுள்ளது. அதேசமயம் இது நரகத்துக்கு இட்டுச்செல்லும் நோக்கங்கள் பலவற்றுக்கிடையிலும் சிக்கியுள்ளது என அவர் கூறினார்.

‘தமது ஆதிக்கத்தாலும் வலுவாலும் அமெரிக்கர்கள் தோற்றுவிக்கும் நரகத்தில் உழல்பவர்கள் வேற்று நாட்டவர்களாக இருப்பதே பிரச்சினையாகவுள்ளது. சோவியத் யூனியனை ஆப்கானிஸ்தானிலிருந்து அகற்ற அமெரிக்கா வளர்த்துவிட்ட தலிபானினால் துன்பட்டவர்கள் ஆப்கான் மக்களே. இது போலவே ஈரானை தண்டிப்பதற்காக தாம் ஆதரித்த சதாம் ஹுஸைனை ஒழித்துக்கட்ட அமெரிக்கா நடத்திய யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கில் இறந்தவர்கள் ஈராக்கிய மக்களே’ என அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply