சர்வதேச சமூகத்தை தமிழ்த்தரப்பினர் பக்கம் வைத்திருப்பதே கூட்டமைப்புக்கு கிடைத்த வெற்றி: சுரேஷ் பிரேமச்சந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேர்மையாகவே அதிகார பரவலாக்கல் குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தையின் பெறுபேறுகள் எவையும் வெளிவரவில்லையாயினும் சர்வதேச தரப்பை தமிழர் தரப்புடன் வைத்திருப்பதில் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது.

தமிழ் சிவில் சமூகத்தினருடனான சந்திப்பில் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை குறித்து கூட்டமைப்பு தெளிவுபடுத்தியதாக அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் இது பற்றி மேலும் தகவல் தருகையில்,

கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்துவது சிங்கள பௌத்த அதி தீவிரவாத அரசாங்கத்துடன் ஆகும். அரசாங்கத் தரப்பு எதையும் கொடுக்கும் நிலையில் இல்லை.

எமது அரச தரப்புடனான பேச்சுவார்த்தை 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பாற்பட்டதாகும். 13 ஆவது திருத்தச் சட்டம் ஒற்றையாட்சி அமைப்புக்குள், இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அமைய சேர்க்கப்பட்டதாகும்.

13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் அதிகாரப் பகிர்வு குறித்து பேசும்போது அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டு வருவது பற்றிப் பேச வேண்டும். அரசியல் சாசன மாற்றத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம். இதனை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமா என்பதே இன்றைய கேள்வியாகும்.

தமிழ் சிவில் சமூகத்தினர் பேச்சுவார்த்தை சுய நிர்ணய உரிமையின் அடிப்படையிலா அல்லது அதிகாரப் பரவலாக்களின் அடிப்படையிலா அல்லது அதிகாரப் பகிர்வின் அடிப்படையிலா பேசப்படுகின்றது.

இதற்கும் அப்பால் கூட்டமைப்பு அடிமட்டம்வரை தமது செயற்பாடுகளை கொண்டிருக்கவில்லை என்ற தமிழ் சிவில் சமூகத்தின் ஆதங்கத்தை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. அது குறித்து தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply