நெல் கொள்முதல் பெறுமதி குறைவால் விவசாயிகள் கவலை
வவுனியா மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை காலம் ஆரம்பித்துள்ள போதிலும் நெல்லின் கொள்முதல் பெறுமதி குறைவடைந்துள்ளமையினால் விவசாயிகள் கவலையடைந் துள்ளனர்.
ஒரு மூடை நெல்லினை தனியார் 1,200 தொடக்கம் 1,400 வரையே கொள்வனவு செய்து வருவதனால் தாம் பெரும் நட்டமடைவதாக வவுனியா மாவட்ட விவசாயிகள் தெரிவிப்பதுடன் எரிபொருளின் பெறுமதி அதிகரித்து காணப்படுவதனால் அறுவடை இயந்திரத்தின் செலவு ஏக்கருக்கு 8,000 ரூபா முதல் 9,000 ரூபாவரை செலவாகுவதாகவும் எனினும் பல்வேறு கரணங்களால் விளைச்சல் குறைவடைந்துள்ளமையினால் தமது செலவுத் தொகையினை ஈடு செய்ய முடியாதுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் உழுந்துச்செய்கை பாதிபடையாதன் காரணமாக சிறந்த விளைச்சலை பெறக்கூடியதாகவுள்ளதாகவும் உழுந்துக்கு கிராக்கி ஏற்பட்டுள்ள போதிலும் அதன் கொள்முதல் பெறுமதியும் இன்னும் சில நாட்களில் குறைவடைவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் உழுந்து செய்கையாளர்கள் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply