யாழ்ப்பாணத்தில் ஆளுநர்களின் மாநாடு
இலங்கை ஆளுநர்களின் மாநாடு எதிர்வரும் செப்ரம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது என வடமாகண ஆளுநரின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 17 ஆம் திகதி வடமாகண திணைக்கள செயலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி இத்தகவலை செயலாளர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
இக் கலந்துரையாடலில் வடமாகண திணைக்களங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புதல், அதிபர் இடமாற்றங்களை மேற்கொள்ளுதல், பிரிவு ரீதியாக வடமாகணத்தில் நடைபெற்றுவரும் வேலைத்திட்ட முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதிபர் இடமாற்றத்தை மேற்கொள்ளுவதற்கு குழு ஒன்றை நியமித்து அக்குழுவின் மூலம் இடமாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வடமாகண கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆளுநரால் பணிக்கப்பட்டுள்ளது.
அதிபர் சங்கங்கள் மாவட்ட ரீதியான பல்வேறு தரத்தில் உள்ள அதிபர்களை உள்ளடக்கி இதற்குரிய இடமாற்ற வரையறை கொள்கை தீர்மானிக்கப்படும் என வடமாகண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் வடமாகண பிரதம செயலாளர் விஜலக்சுமி ரமேஸ், செயலாளர் எல்.இளங்கோவன் உட்பட சகல திணைக்களங்களின் செயலாளர்கள், பிரதிச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply