மாலைதீவு ஸ்திரமான நாடாக இருக்க வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு
மாலைதீவு மக்களின் பாதுகாப்புக்காகவும் நலனுக்காகவும் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளதுடன் நாடு என்ற வகையில் மாலைதீவு சகலதுறைகளிலும் ஸ்திரமான நாடாக தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே இலங்கை இருக்கிறது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்துள்ளார்.
மாலைதீவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள விசேட பிரதிநிதி மொஹமட் வஹிதுதீனை ஜனாதிபதி நேற்று அலரி மாளிகையில் சந்தித்து உரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கலாநிதி மொஹமட் வஹீட்டின் விசேட தூதுவராக இலங்கை வந்துள்ள இவர் மாலைதீவு ஜனாதிபதியின் விசேட செய்தியொன்றையும் ஜனாதிபதி யிடம் கையளித்தார். இச் சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாலைதீவு ஜனாதிபதியின் விசேட தூதுவராக இலங்கை வந்துள்ள மொஹமட் வாஹிதுதீன் விரைவில் மாலைதீவின் உப ஜனாதிபதியாக நியமிக்கப்படவுள்ளார். இச் சந்திப்பின் போது ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply