விளைச்சல் அதிகம் விற்பனை இல்லை: திண்டாடும் விவசாயிகள்
எதிர்பார்த்ததைவிட அதிகம் விளைச்சல் கிடைத்துள்ளபோதும், விற்பனை விலை குறைவாகக் காணப்படுவதனால் வங்கிக் கடன்களை மீளச் செலுத்த முடியாதுள்ளதாக அச்சுவேலி விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த நெல் மற்றும் வெங்காயப் பயிர்ச்செய்கையாளர்களே தமது விவசாய நடவடிக்கைகளுக்காக பெற்றுக்கொண்ட வங்கிக் கடன்களை செலுத்தமுடியாது சிரமப்படுகின்றனர்.
தாம் கடனைப் பெற்றுக் கொள்ளும் போது வெங்காயத்தின் விலை 80 தொடக்கம் 100 ரூபா வரையும், நெல் 2500 தொடக்கம் 3500 வரையும் விலைபோனதாகவும், தற்போது வெங்காயம் 30-40 ரூபாவாகவும், நெல் 1400-1600 ரூபாவாக விலைபோவதாகவும் அவர்கள் கூறினர்.
மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் தற்போது அதிகளவில் மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமையே இந்த விலை வீழ்ச்சிக்கு காரணம் என்றும் விவசாயிகள் குறிப்பிட்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply