இலங்கையை பழிவாங்கும் செயற்பாடுகளில் அமெரிக்கா
இலங்கையை பழிவாங்கும் வகையில் ஜெனீவாவில் நடை பெறவுள்ள மனித உரிமை ஆணைக்குழு அமர்வில் அமெரிக் காவே குற்றப் பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக நிர்மாணத் துறை, பொறியியல் சேவை, வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.
அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால் இலங்கை யில் பயங்கரவாதத்தை முறிய டித்தமையே இதற்கு பிரதான காரணம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தீர்மானங்களை அறிவிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
அமைச்சர் இங்கு மேலும் உரையாற்று கையில், சூழ்ச்சி, தேர்தல் ஒன்றின் மூலம் அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாத நிலையிலேயே மனித உரிமை போன்ற குற்றச்சாட்டுக்களை 27 ஆம் திகதி மனித உரிமை அமர்வின் போது அமெரிக்கா ஜெனீவாவில் முன்வைக்கவுள் ளது. ஜனாதிபதி அவர்களையும், எமது தாய்நாட்டின் விடுதலைக்காக போராடி உயிரை அர்ப்பணிப்பு செய்த படை வீரர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதே மேற்கத்திய நாடுகளின் நோக்கமாகும்.
இது போன்ற செயற்பாடுகளுக்கு மக்கள் ஒரு போதும் அனுமதி வழங்க மாட்டார்கள். இலங்கை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தும் பின்னணியில் வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களில் சில தீய சக்திகள் செயற்படுகின்றன.
லிபியா, சூடான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நிலைக்கு இலங்கையையும் தள்ளுவதே அமெரிக்காவின் மற்றுமொரு நோக்கமாகும். அண்மையில் நீர்கொழும்பு சிலாபம் பகுதிகளில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் பின்னணியில் சில அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பு காணப்படுகின்றன.
ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சார்பான சில விடயங்களை ஏற்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட நாடகமாகும். அதனையே மீனவர்கள், எரிபொருள் விலை அதிகரிப்பு என்ற பெயரில் அரங்கேற்றினர்.
அதன் ஒரு அங்கமாகவே உயிர்ப்பலியை ஏற்படுத்தினர் என்றும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply