வடக்கில் எமக்கும் வீடு தாருங்கள்: இந்தியாவிடம் வேண்டுகோள்
வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் இடம் பெயர்வுகள் காரணமாகவும், அதனையடுத்து தமது கிராமங்களில் மீள்குடியேறியுள்ள மக்களினது வீடமைப்பு தேவைகளை கவனத்திற் கொண்டு இந்தியா அரசாங்கம் வழங்கவுள்ள 50 ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தில் 1990ம் ஆண்டு இடம் பெயர்க்கப்பட்ட முஸ்லிம், தமிழ் மக்களை உள்வாங்கு விடயத்தில் மாறுபட் கருத்து முரண்பாடுகள் தோன்றியுள்ளதை யடுத்து இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா அமைப்பு என்பனவற்றுக்கு மீள்குடியேற்ற கிராம அமைப்புக்கள் பள்ளிவாசல்கள் கடிதங்களை அனுப்பியுள்ளனர்.
இலங்கையில் இடம் பெயர்ந்த மக்களுக்கு இந்திய அரசாங்கம்,பல உதவிகளை தொடராக செய்துவருவதற்கு தமது நன்றிகளை தெரிவிப்பதாகவும்,வீடமைப்பு திட்டத்தில் பயனாளிகளை சேர்ப்பதற்கு 1990 ஆம் ஆண்டுக்கு பழைய, புதிய அகதிகள் என்ற அளவுகளை பயன்படுத்துவதால் 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம் பெயர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நடை முறையால் மீள்குடியேறியுள்ள மக்களின் பெரும் பாலானலவர்கள் அதிருப்தி கொண்டுள்ளதுடன், பிரதேசத்தில் பிளவுகளை தோற்றுவிக்க இது வழிவகுப்பதாகவும் நிர்வாகங்கள் அக்கடிதத்தில் எழுதியுள்ளன.
இதனால் இதனை கவனத்திற்கொண்டு இடம் பெயரந்த மக்கள் என்ற வகையில் தமது அளவுகோளை பயன்படுத்துமாறு மேலும் இக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடக்கிலருந்து 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம் பெயர்ந்த 35 ஆயிரம் குடும்பங்களில், 20 ஆயிரம் குடும்பங்கள் மீளகுடியமர தமது பதிவை மேற்கொண்டுள்ளதாக பிரதேச செயலாளர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு,வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்தே இம்மக்கள் இடம் பெயரக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது என்றும் நிர்வாகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply