இலங்கையில் மிக விரைவில் தனியார் பல்கலைக்கழகங்கள்
இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிப்பதற்கு மிக விரைவில் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். இலங்கையில் உயர் கல்வி நிலையங்கள், தனியார் பல்கலைக் கழகங்களை ஆரம்பிப்பதற்கு உள்நாட்டு/வெளிநாட்டு கல்வியியலாளர்கள் முதலீட்டாளர்களுக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். இலங்கையில் எவ்வாறான எதிர்ப்புக்கள் கிளம்பினாலும் தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும்.
மேற்கண்டவாறு புதன்கிழமை (22) கல்கிசை சந்தியில் ஐக்கிய இராச்சியத்தின் கல்வியை வழங்கும் பொல்ட்டன் பல்கலைக் கழகத்தின் இலங்கைக் கிளையை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் திசாநாயக்க தெரிவித்தார். இந்நிகழ்வு பொல்ட்டன் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சிந்தக்க விஜயவர்த்தன தலைமையில் நடைபெற்றது.
வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லை பதித்து, பொல்ட்டன் பல்கலைக்கழகம் இலங்கைக்குள் உயர்ந்த புகழ்மிக்க கல்வி வழங்கும் நிலையமாக காலடி எடுத்து வைக்கிறது. இதனை ஆரம்பித்து வைப்பதற்கான உத்தியோகபூர்வ வைபவம் 2012 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி இலக்கம் 54, காலி வீதி, கல்கிஸ்சையில் அமைந்துள்ள WCMT பல்கலைக்கழகத்தின் இலங்கை கல்வி நிலையத்தில் நடைபெற்றது. உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். WCMT பல்கலைக்கழகமானது பொல் ட்டன் பல்கலைக்கழகத்தின் நேரடி கண் காணிப்பின் கீழ் நாடு கடந்த ரீதியில் கல்வித்திட்டங்களை வழங்கும் கல்வி நிலைய மாக இயங்குகின்றது. WCMT பல்கலைக் கழகமானது இந்தியா, ஐக்கிய அரபுகள் இராச்சியம் போன்ற நாடுகளில் கல்வி போதிப்பதில் புகழ்பெற்று விளங்கும் கே.இ.எஸ். குரூப் இந் நிறுவனத்தின் ஒரு அங்கமாகவும் திகழ்கின்றது.
வியாபார முகாமைத்துவ இளமானி, முதுமாணி, கணனி விஞ்ஞானப் பட்டப்படிப்பு, தகவல் தொழில்நுட்ப விஞ்ஞான பட்டப்படிப்பு, பட்டப்படிப்பு, பட்டப்பின் படிப்பு போன்ற அனைத்து விதமான பிரிவுகளையும் உள்ளடக்குகின்றது.
WCMT பல்கலை க்கழகத்தில் எடக்சலுடன் இணை ந்து உயர் தேசிய டிப்ளோமா மற்றும் ஏனைய கல்வி நிகழ்ச்சிகளும் வழங்கப்படுகின்றன. பறக்கும் பீட நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக, மாணவர்கள் பொல்ட்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மிகவும் அனுபவம் வாய்ந்த புகழ்மிக்க விரிவுரையாளர்களை முதற்தடவையாக நேருக்கு நேர் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
இலத்திரனியல் புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகளை கூடுத லாக கொண்ட பல்கலைக்கழக வாசிகசாலையுடன் முறையான கற்றல் சூழலை மாணவர்கள் பெறுவார்கள்.
முழு நேர தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும், அதேபோல பகுதி நேர மாணவர்களுக்கும் நன்மை பயக்கக் கூடிய வகையில் இந்தப் பாடநெறிகள் வடிவமைக்கப்பட் டுள்ளன. பகுதி நேர வகுப்பு மாணவர்களுக்காக வார இறுதி நாட்களிலும், மாலை நேரங்களிலும் வகுப்புக்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply