மல்லாவி வைத்தியசாலையில் வசதிகள் இல்லை; நோயாளர்கள் அவதி

மல்லாவி மருத்துவ மனையில் ஆய்வு கூட வசதிகள் எக்ஸ்ரே வசதிகள் இல்லாத தால் நோயாளிகள் பிற இடங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அலைந்து திரிகின்றனர்.

டெங்கு, மலேரியா போன்ற அபாயகரமான நோய்கள் பரவி வருகின்ற நிலையில் இங்கு ஆய்வுகூட வசதிகள் இல்லாமை பெரிய குறைபாடாக உள்ளது.

இதனால் நோயாளர்கள் கிளிநொச்சி வவுனியா ஆகிய இடங்களுக்குச் செல்ல வேண்டிய பரிதாப நிலையிலுள்ளனர். மேலும் எக்ஸ்ரே வசதிகளும் இங்கு இல்லாததால் பெரும் பாதிப்புக்களை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

இதேவெளை கிளிநொச்சி முல்லைத்தீவகளிலள்ள வைத்திய சாலைகளில் வைத்தியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வராமையால் நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தாமதமாக வரும் வைத்தியர்கள் குறைந்தளவு நோயாளர்களை பார்வையிட்டு விட்டு மற்றவர்களை மறுநாள் வருமாறு பணிக்கின்றனர்.

சில வைத்தியர்கள் தாங்களுடைய பிரத்தியோக மருத்துவ நிலையங்களுக்கு வந்து சிகிச்சை பெறுமாறு கூறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தாங்கள் தனிப்பட்ட முறையில் நடாத்திவரும் மருத்துவ நிலையங்களில் அக்கறையெடுப்பதால்தான் வைத்தியசாலைக்கு இவர்கள் ஏனேதானோவென்று வந்து போதவதாக நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply