தாருஸ்மன் அறிக்கை வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளப்படவேண்டுமென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.அண்மையில் அரசாங்கப் புள்ளி விபரத் திணைக்களம் இறுதிக் கட்டயுத்தத்தின் போது ஏற்பட்ட உயிர்ச் சேத விபரங்களை வெளியிட்டுள்ளது.ஐக்கிய நடுகள் நிபுணர் குழு அறிக்கையின் புள்ளி விபரங்களுக்கும்,இலங்கைப் புள்ளி விபரத் திணைக்கள புள்ளி விபரங்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசம்காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நிபுணர் குழு அறிக்கை, எடுகோள்கள் மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையில்தயாரிக்கப்பட்டுள்ளது எனவும், இந்தத் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 8000 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகஇலங்கைப் புள்ளி விபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply