புலிகளின் நிழல் அமைப்புக்களுக்கு முடிவு கட்ட வேண்டும்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயல்பாடுகள், புலி ஆதரவு சக்திகள் மற்றும் நிழல் அமைப்புக்களின் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கின்ற நாடுகள், சுவிற்சலாந்து ஆகியன முடிவு கட்ட வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி சமாதானத்தை விரும்புகின்ற இலங்கையர்கள் என்கிற அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
சமாதானத்தை விரும்புகின்ற இலங்கையர்கள் என்கிற அமைப்பின் கோரிக்கை அடங்கிய அறிக்கை வருமாறு;
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க நிழல் அமைப்புக்கள் மற்றும் ஆதரவு சக்திகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம், சுவிற்சலாந்து ஆகியவற்றுக்கு கோரிக்கை.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்டு உள்ள போதிலும் இந்த இயக்கத்தின் நிழல் அமைப்புக்கள் இன்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மிகவும் பலமான நிலையிலேயே செயல்பட்டு வருகின்றன.
சுவிற்சலாந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்த ஒரு நாடு அல்ல. இன்றும் இந்நாட்டில் புலி ஆதரவுச் செயல்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்கால சமாதானம், அமைதி, சக வாழ்வு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் குறிப்பாக தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் எதிர்கால சமாதானம், அமைதி, சக வாழ்வு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் பேராபத்தானவையாக பயங்கரவாத அமைப்புக்களின் செயல்பாடுகள் இருந்து வந்திருக்கின்றன.
ஆனால் ஜனநாயகம், மனித உரிமை, மனிதாபிமானம் ஆகியவற்றின் பெயர்களால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சுவிற்சலாந்து ஆகியவை பயங்கரவாத அமைப்புக்களின் செயல்பாடுகளை அனுமதித்து வந்திருப்பது துரதிஷ்டமான நிலைமையே.
இலங்கையில் போர் உக்கிரம் அடைவதற்கும், பயங்கரவாத செயல்பாடுகள் தீவிரம் அடைவதற்கும், பயங்கரவாத அமைப்புக்கள் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக வளர்வதற்கும் இந்நிலைமை ஊக்கியாக செயல்பட்டு வந்திருக்கின்றது.
இன்று பயங்கரவாதம் இல்லாத நாடாக இலங்கை மலர்ந்து உள்ளது. ஆனால் இலங்கையின் எதிர் கால சமாதான முன்னெடுப்புக்கள், இனங்களுக்கு இடையிலான சக வாழ்வு மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றுக்கு தடைக் கற்களாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சுவிற்சலாந்து ஆகியவற்றின் ஜனநாயகம், மனித உரிமை, மனிதாபிமானம் ஆகியவற்றின் காரணத்திலான கண்ணோட்டம் காணப்படுகின்றது.
இலங்கையில் ஏற்படக் கூடிய நிரந்தர சமாதானம் மற்றும் இணக்கத் தீர்வு ஆகியவற்றுக்கு இந்நாடுகளின் மேற்சொன்ன கண்ணோட்டம் பாரிய தடை ஆகி விடும்.
எனவே இந்நாடுகள் புலிகள் இயக்கத்தின் நிழல் அமைப்புக்கள் மற்றும் புலி ஆதரவு சக்திகள் ஆகியவற்றின் செயல்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
– சமாதானத்தை விரும்பும் இலங்கையர்கள்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply