பிரேரணைக்கு ஆதரவு திரட்ட அமெரிக்கா கடும் பிரயத்தனம்

இலங்கைக்கு எதிராக ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிராக சக நாடுகளின் ஒத்துழைப்பைத் திரட்டுவதில் இலங்கைத் தூதுக்குழு தொடர்ந்து மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. நாளுக்கு நாள் இலங்கைக்கான ஆதரவு பெருகி வரும் அதே வேளை அமெரிக்காவும் இலங்கைக்கு எதிராக ஆதரவு திரட்டுவதில் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக ஜெனீவாவில் இருந்து பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவர உள்ள பிரேரணை தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கை குறித்து வினவியதற்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது:- அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கைக்குழு கொங்கோ மற்றும் அல்ஜீரியா ஆகிய நாட்டு வெளிவிவகார அமைச்சர்களை சந்தித்து பேச்சு நடத்தியது.

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அந்த நாடுகள் உறுதியளித்தன. கொங்கோ வெளிவிவகார அமைச்சர் பெசில் இகோபி, அல்ஜீரிய வெளிவிவகார அமைச்சர் மொராட் மெசல்சி ஆகியோர் இலங்கைக்கு எதிரான பிரேரணையை முறியடிக்க ஒத்துழைப்பு வழங்க இணங்கியுள்ளனர் என்றும் அவர் கூறினார். சர்வதேச இஸ்லாமிய பேரவையில் அல்ஜீரியா தலைமை வகிப்பதோடு அல்ஜீரியாவின் உதவியூடாக ஏனைய நாடுகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாட்டு பிரதிநிதிகளுடன் இலங்கைக்குழு பேச்சு நடத்தியதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர், தென்னாபிரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை இலங்கைக்குழு நேற்று சக்திக்க ஏற்பாடாகியிருந்தது. ஜோர்தான் வெளிவிவகார அமைச்சரை சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கூறினார்.

இதேவேளை, நேற்று முன்தினம் மனித உரிமை பேரவை அமர்வில் உரையாற்றிய மலேசியா மற்றும் போர்த்துக்கல் என்பன இலங்கைக்கு சார்பாக கருத்துத் தெரிவித்துள்ளதை ஆரம்ப அமர்வுகள் இன்றுடன் நிறைவடைய உள்ளன. இதே வேளை இலங்கைக்கு எதிராக ஆதரவு திரட்டுவதில் அமெரிக்கா கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாகக் கூறிய அவர் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் புலிகளுக்கு சார்பான குழுக்களும் அங்கு தங்கியிருந்து அமெரிக்க முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகக் கூறினார்.

எனினும் இலங்கை குழு பல்வேறு நாடுகளையும் சந்தித்து உண்மை நிலையை விளக்கி வருகிறது. எமது முயற்சியில் கணிசமான வெற்றியீட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதே வேளை இலங்கைக் குழுவினர் நாளை நாடு திரும்ப உள்ளதோடு அதிகாரிகள் மாத்திரம் அங்கு தங்கியிருப்பர் என அறி விக்கப்படுகிறது.

இம்மாத நடுப்பகுதியில் மீண்டும் முக்கிய அமைச்சர்கள் அங்கு செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 23 ஆம் திகதி வரை மனித உரிமை பேரவை அமர்வுகள் நடைபெற உள்ளன. இறுதி 3 நாட்களிலே வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதோடு இலங்கைக்கு எதிரான பிரேரனையை 19ஆம் திகதிக்கு முன்னர் கொண்டுவர வேண்டும் என தெரியவருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply