மூன்று வருடங்களின் பின் பொலிஸ் ஆணைக்குழு

மூன்று வருடங்களுக்குப் பிறகு பொலிஸ் ஆணைக்குழு நேற்று முதன் முறையாக கூடியது. ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சேனக்க வல்கம்பாய, பொலிஸ் அதிகாரி களால் பொது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பான முறைப்பாடுகளை ஆணைக்குழு வரவேற்பதாக கூறினார்.

கொள்ளுபிட்டி ரொட்டுண்டா கார்ட னிலுள்ள பொலிஸ் ஆணைக்குழு கட்டடத்தில் நேற்று நடைபெற்ற இந்த அமர்வினை யடுத்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அதன் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அரசியல்யாப்பின் 17வது திருத்தச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் பாராளுமன்ற ஆலோசனைக்குழு இக்குழுவை நியமித்துள்ளது. ஏழு அங்கத்தவர்களைக் கொண்ட இக்குழுவானது பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து தமது அதிகாரத்துக்கு உட்பட்ட வகையில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும்.

அதேவேளை 2006 முதல் 2009 வரை இயங்கிய பொலிஸ் குழுவிற்கு கிடைக்கப்பெற்ற 2 ஆயிரம் முறைப்பாடுகளுக்கும் நியாயமான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதா என்பதுக் குறித்து ஆராயுமெனவும் அதன் தலைவர் கூறினார்.

பொதுமக்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் சுமுகமான உறவு நிலையை பேணுவதற்கு உதவும் வகையிலேயே எமது ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. தாம் கட்சி, இன, மத பேதமின்றி முறைப்பாடு செய்யும் அனைவருக்கும் நியாயமான முறையில் தீர்வினைப் பெற்றுக் கொடுப்போமெனவும் அவர் குறிப் பிட்டார்.

மொழி பிரச்சினைக் காரணமாக நாட்டின் பல இடங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களில் அநீதிகள் இழைக்கப் படுவதாக எவரேனும் கருதினால் அது தொடர்பாக எமக்கு முறையிடலாமெனவும் அவர் தெரிவித்தார்.

திருகோணமலை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் பொலிஸ் ஆணை க்குழுவின் கிளைகள் திறக்கப்பட விருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

பொலிஸ் ஆணைக்குழுவில் பூஜ்ய எல்லே குணவங்ச தேரர், டீ. திஸாநாயக்க, சாமின் மதுரசிங்ஹ, ஆர். சிவராமன், எம். எம். எம். மவுஜூட், நில்ரன் குணரட்ன ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply