சீனாவுக்குச் சவாலான ‘ஆகாஷ்’ இந்திய விமானப்படையில் இணைப்பு

வானிலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்று துல்லியமாகத் தாக்கும் ‘ஆகாஷ்’ ஏவுகணை இந்திய விமானப்படையில் நாளை இணைக்கப்படவுள்ளது.

இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ எனப்படும் இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (ஐ.ஜி. எம்.டி.பி.) ‘ஆகாஷ்’ ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகண‌ை இந்தியாவின் ‘பேட்ரியாட்’ என அழைக்கப்படுகிறது. இலகு ரக ஏவுகணையான ‘ஆகாஷ்’ ஏவுகணை, ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணையானது ஆளில்லா விமானங்கள், போர் விமானங்களைத் தாக்கவல்லது. கப்பல்தளம், ஹெலிகொப்டர், நீர்முழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றிலிருந்தும் ஆகாஷ் ஏவுகணையைச் செலுத்தலாம்.

இந்த ஏவு‌கணை இந்திய விமானப்படையிடம் முறைப்படி நாளை (சனிக்கிழமை ) ஒப்படைக்கப்படவுள்ளது. இதற்கான விழாவில் இராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோனி கலந்து கொள்கிறார்.

‘பேட்ரியாட்’ என்பது அமெரிக்கா தயாரித்துள்ள ஏவுகணை ஆகும். பேட்ரியாட், கடந்த 1990ஆம் ஆண்டு ஈராக்கில் நடந்த வளைகுடா போரில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது.

சீனாவினால் அச்சுறுத்தல் ஏற்பட்டால் எதிர்க்கவே இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் இராணுவ ஆயுத தயாரிப்பில் இந்த ஏவுகணை ‌ஒரு மைல்கல்லாகும் எனவும் கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply