கூட்டமைப்பின் முடிவில் மாற்றமில்லை

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்வதில்லை என்ற முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று காலை முதல் மாலை 6.30 மணிவரை பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கூட்டமைப்பின் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர்.

இந்த கலந்துரையாடலின் இறுதியில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாங்கள் நேரடியாக கலந்து கொள்ளவில்லையே தவிர தமிழ் மக்களின் நலன் குறித்து அனைத்து விடயங்களையும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு இருப்பதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

47 நாடுகளுக்கும் கூட்டமைப்பின் தலைவர் கடிதம் அனுப்பியமையை இன்று கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டது.

கூட்டமைப்பின் கடிதம் அந்நாடுகளுக்கு கிடைக்கப் பெற்றமைக்கான பதிலை தமக்கு 47 நாடுகளும் அனுப்பியுள்ளதாகவும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மக்களை தூண்டிவிடும் செயற்பாடுகளை தவிர்க்கவும், மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயங்கள் எழாமல் இருப்பதற்காகவும் தமது கட்சி ஜெனீவா மாநாட்டில் பிரசன்னமாகாதிருக்க தீர்மானித்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply