ரஷ்யாவில் மூன்றாவது தடவையாகவும் விலாடிமீர் புடின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
ரஷ்யாவில் மூன்றாவது தடவையாகவும் விலாடிமீர் புடின் அதிபராக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார்.ஆனால் அவரது எதிர்ப்பாளர்களும் தேர்தல் கண்காணிப்பாளர்களும் இந்த அதிபர் தேர்தலில் புடினுக்கு ஆதரவாக மோசடிகளும் முறைகேடுகளும் இடம்பெற்றுள்ளதாக விமர்சித்துள்ளனர்.
ரஷ்யாவின் அதிபர் தேர்தல் ‘புடின் வெற்றியடையக் கூடிய விதத்தில் திரிக்கப்பட்டிருந்தது’ என்று ஓஎஸ்சீஈ என்ற பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முன்னர் இரண்டு தடவைகள் அதிபராகவும், தற்போது பிரதமாகவும் இருக்கின்ற புடினுக்கு ஆதரவாக 63 வீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரவலான வாக்குமோசடிகளும் தேர்தல் முறைகேடுகளும் இடம்பெற்றுள்ளதாகவும், தேர்தல் முடிவுகள் எப்படிவரும் என்பதில் சந்தேகமே இருக்கவில்லை என்றும் ஓஎஸ்சீஈ அமைப்பு கூறியுள்ளது.
‘எல்லா வேட்பாளர்களுமே சுதந்திரமாக பிரசாரம் செய்ய வாய்ப்பு இருந்த போதிலும், ஜனாதிபதி வேட்பாளரான பிரதமர் விலாடிமீர் புடினுக்கு ஆதரவாகவே ஆரம்பத்தில் இருந்து தேர்தல் பணிகள் திரிக்கப்பட்டிருந்தன’ என்று ஓஎஸ்சீஈ கண்காணிப்பாளர்களின் அறிக்கை கூறுகின்றது.
தேர்தல் நடத்தப்பட வேண்டியதன் தேவையே, முடிவு முன்கூட்டியே தெரிந்திருக்கக் கூடாது என்பது தான் எனவும் ரஷ்யாவில் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது முன்கூட்டியே உறுதிசெய்யப்பட்ட விடயமாகவே இருந்தது என்றும் ஓஎஸ்சீஈ அமைப்பின் பேச்சாளர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply