அமெரிக்காவிற்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கை கேள்வி

அமெரிக்காவிற்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கை அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.அமெரிக்கப் படையினரால் மேற் கொள்ளப்பட்டதாக சுமத்தப்படும் மனித உரிமைமீறல் குற்றச் சாட்டுக்களை அந்நாட்டு அரசாங்கம் உதாசீனம் செய்து வருவதாகக்குறிப்பிட்டுள்ளது.செப்டம்பர் 11 தாக்குதல்களின் பின்னர் அமெரிக்கப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் விளக்கமளிக்க வேண்டுமென இலங்கைவலியுறுத்தியுள்ளது.
 
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை அடிப்படையற்ற ஆதாரங்களைக்கொண்டு தயாரிக்கப்பட்டவை என அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும், அமெரிக்கப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் விக்கிலீக்ஸ் இணையம் ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளது என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
 
ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அமெரிக்கத ;துருப்பினரின் நடவடிக்கைகள் குறித்து பாரியளவில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply