நீலநிற பட்டியணிந்து வருகை தந்தார் பியசேன எம்.பி

ஆளும் தரப்பிற்கு மாறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட எம்.பியான பியசேன நீல நிறத்திலான பட்டியை அணிந்திருந்தவாறு சபைக்குள் இருந்தார். பாராளுமன்றம் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை கூடியது. சபை கூடுவதற்கு முன்னரே அவைக்குள் பிரவேசித்த எம்.பியான பியசேன கழுத்தில் நீல நிறத்தினால் பட்டியொன்றை அணிந்திருந்தார். அவைக்குள் பிரவேசித்த அவர் ஆளும் கட்சியின் உறுப்பினர்களுடன் ஏதேதோ உரையாடிக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவரைக் கட்சியிலிருந்து நீக்க முயற்சித்தமையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவையடுத்து அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரான பொடியப்பு பியசேன மீதுநடவடிக்கை எடுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கொழும்பு மாவட்ட நீதி மன்றம் இடைக்காலத்தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply