இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து இந்தியா இன்னமும் தீர்மானிக்கவில்லை

இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பில் இந்தியா இன்னமும் தீர்மானிக்க வில்லைஎனத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராகதீர்மானம் நிறைவேற்றும் திட்டம் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் உத்தியோகபூர்வநிலைப்பாட்டை இன்னமும் வெளியிடவில்லை.
 
எனினும், மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் நன்மையை விடவும் தீமைகளையே அதிகம் ஏற்படுத்தும் என்பதே இந்தியாவின் பொதுவான நிலைப்பாடு என தெரிவிக்கப்படுகிறது.
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தமிழக அரசியல்வாதிகள் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ஆதரவளிக்க வேண்டுமென இந்திய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றமைகுறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply