கொழும்பு மாநகரசபையில் கண்டன தீர்மானம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் முன்வைத்த பிரேரணையை எதிர்த்து கொழும்பு மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கொழும்பு மாநகர சபை உறுப்பினர் அஸாத்சாலி யினால் இந்தப் பிரேரணை கொண்டுவரப்பட்டது.

இது தொடர்பாக 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இலங்கை அரசாங்கம் சிறு பான்மையினரின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தும் இவ்வேளையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதி ராக அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் மேற்கொண்டு வரும் செயற் பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் அஸாத்சாலி தெரிவித்தார்.

அஸாத்சாலி பவுண்டேசன் நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

சர்வதேச ரீதியில் வன்முறைகளில் ஈடுபடும் அமெரிக்காக இலங்கை போன்ற சிறிய நாடுகள் மீது எதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத் தொடரில் பிரேரணை கொண்டு வரவேண்டும்? மத்திய கிழக்கு நாடுகளான ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா உட்பட மேலும் பல நாடுகளில் வன்முறைகளை தோற்றுவித்து அங்கு குழப்பங்களை ஏற்படுத்திய அமெரிக்கா சமாதானத்தை நிலைநாட்டுவேன் என்று கூறி அந்நாடுகளில் பொருளாதார சுரண்டல்களை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் எண்ணெய் வளங்களை சூறையாடுவதற்காக அந்நாடுகளில் வன்முறைகளை தோற்றுவித்துள்ள அமெரிக்கா, தற்போது அந்த நாடுகள் பொருளாதார ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றன. சமாதானத்தை ஏற்படுத்தப் போவதாக கூறும் அமெரிக்கா, இப்போது அந்நாடுகளில் சமாதானம் நிலவுகின்றதா? எனவும் கேள்வி எழுப்பினார்.

இலங்கையில் எண்ணெய் படிமங்கள் காணப்படுகின்றமை அமெரிக்காவுக்கு தெரிந்துவிட்ட காரணத்தினால் தான் இலங்கை மீதும் போலியாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டல்ல. இது முழு இலங்கைக்கும் எதிராக மேற்கொண்டு வரும் சதித்திட்டம். எனவே, இவ்வாறான செயற்பாடு களுக்கு இன, மத, குல பேதமின்றி சக லரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க முன்வர வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply