சாவகச்சேரியில் இராணுவ வீரர்கள் மூவர் சுட்டுக் கொலை

இராணுவப் படைவீரர் ஒருவர் சக படைவீரர்கள் மீது துப்பாக்கிச் சூடுநடத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில் மொத்தமாக மூன்று படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.தாக்குதல் நடத்திய படைவீரர் இரண்டு படைவீரர்கள் மீது துப்பாக்கிச் சூடுநடத்தி, தாமும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேசத்தில் மூன்று இராணுவப்படைவீரர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சாவகச்சேரியில் அமைந்துள்ள முருகன் ஆலயமொன்றின் பாதுகாப்புகடமையில் ஈடுபட்டிருந்த படைவீரர்களே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிஉயிரிழந்துள்ளனர்.

நேற்றைய தினம் இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என இராணுவப்பேச்சாளர் நிஹால் ஹப்புவாரச்சி தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply