நேற்று முளைத்த அரசியல் கத்துக்குட்டிகள் திடீரென பெருந்தலைவராக கடும் முயற்சி

வன்னி மக்களுக்கு தமது உண்மையான தலைமை யாரென்பது தெரியும் ஆசிரிய தொழிலை பார்க்க வேண்டியவர் அரசியல் என்ற போர்வையில் சுயலாப தேடல் என்கிறார்  சங்கரி ஐயா. கிளிநொச்சி மாவட்டத்தில் அரசியல் என்ற போர்வையில் பணிபுரிந்து வருபவர்கள் வெறும் அரசியல் கத்துக்குட்டிகளேயென்றும் மக்கள் பணியை விட தங்கள் சுய இலாபத்திற்காகவே அவர்கள் பாடுபடுவதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வி. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் அபிவிருத்தி என்பதற்கு அப்பால் தமது அரசியல் நலன்களைப் பாதுகாப்பதற்கும் இந்த அபிவிருத்தி நடவடிக்கையில் தம்மை வளப்படுத்துவதற்கும் அம்மணி ஒருவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். தம்மை மக்களின் தொண்டனாகக் காட்டிக் கொள்ளுவதில் அவர் காட்டும் பிரயத்தனம் உண்மையில் செயலில் இல்லை.

செய்யுந் தொழிலே தெய்வம் என்பதற்கொப்ப புனிதமான ஆசிரியத் தொழிலில் இருந்த அப்பெண்மணி மாணவர்களையும் பாழாக்கி இப்போது முழு நேர அரசியல்வாதியாக இருக்கின்றார். அரசியல் என்பது எதுவென எனக்குக் கற்றுத்தர அவர் முனைகின்றார். இவர்களெல்லாம் நேற்று முளைத்தவர்கள். பட்டம், பதவிகளுக்காக சோரம் போனவர்கள். கிளிநொச்சி மக்கள் உண்மையான மக்கள் தலைவர்களை இனங்கண்டுள்ளனர். யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்கி தற்போது அதிலிருந்து படிப்படியாக மீட்சிபெற்றுவரும் இந்த மக்களின் விமோசனத்துக்கு உண்மையாகப் பாடுபட வேண்டும். சலசலப்புக்கள் இந்த மக்களுக்குச் சோறுபோடாது என்று தெரிவித்துள்ள கூட்டணித் தலைவர், மக்கள் இவ்வாறானவர்களை இனங்கண்டு வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply