சுதந்திர தினத்துக்கு முன்னர் இலங்கைக்கு பாரிய யுத்த வெற்றி கிடைக்கும்: அரசாங்கம்
பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திரதினம் கொண்டாடப்படுவதற்கு முன்னர், என்றுமில்லாதளவு பாரிய யுத்தவெற்றியொன்று இலங்கைக்கு கிடைக்கும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் டளஸ் அளகப்பெரும கூறினார்.
சுதந்திர தினத்துக்கு முன்னர் வரலாறு காணாத யுத்தவெற்றியொன்றை இலங்கை எட்டவுள்ளது. விடுதலைப் புலிகளிடமிருந்து கிளிநொச்சியை மீட்ட அரசாங்கப் படைகள், தற்பொழுது பிரபாகரன் ஒழிந்திருக்கும் முல்லைத்தீவை நோக்கி நகர்ந்து வருகின்றன என இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளால் தற்பொழுது எதுவும் செய்ய முடியாத நிலை தோன்றியிருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நாட்டைவிட்டுத் தப்பியோடும் அல்லது சைனட் அருந்தித் தற்கொலை செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகக் கூறினார். எனினும், அவர் தப்பியோடாதவாறு கடற்பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் டளஸ் அளகப்பெரும குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கம் யுத்த வெற்றியைப் பெற்றுவரும் அதேநேரம், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களில் அரசியல் ரீதியான வெற்றியையும் பெற்றுக்கொள்ளும் என அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் எம்முடன் இணைந்து கொள்கின்றனர். கண்டியில் மாத்திரம் 5000 ஐ.தே.க. உறுப்பினர்கள் எம்முடன் இணைந்துகொள்ளவுள்ளனர். இதேபோல ஏனைய பகுதிகளிலும் பலர் இணையவுள்ளனர்” என்றார் அமைச்சர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply