சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்தவின் கொலை விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன:அமைச்சர் ராஜித

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் முடுக்கிவிட்டிருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். 
 
லசந்தவின் கொலை குறித்த விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி நேரடியாக உத்தரவுபிறப்பித்திருப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறினார்.

லசந்தவின் படுகொலையை யார் மேற்கொண்டிருந்தாலும் இது அரசாங்கத்துக்கு ஒரு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. எனவே, விசாரணைகளை நடத்தி அரசாங்கம் நிச்சயமாக கொலையாளிகளைக் கண்டுபிடிக்கும் என்றார் அவர்.

லசந்த விக்ரமதுங்கவைப் படுகொலை செய்யவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லையெனக் குறிப்பிட்ட அமைச்சர் ராஜித சேனாரட்ன, லசந்த தனது நீண்டகால நண்பர் எனவும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply