கூட்டுப் பாதுகாப்பு, இராணுவப் பயிற்சி,உளவுப் பரிமாற்றம் குறித்து இந்தோனேசிய அதிகாரிகளுடன் பாதுகாப்புச் செயலர் கோதபாய பேச்சு நடத்தியுள்ளார்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தோனேசியா சென்றிருந்தார்.
இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்குமிடையிலான உளவுப் பரிமாற்றம், கூட்டுப் பாதுகாப்பு, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, இராணுவ பயிற்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பாக இந்தோனேசிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இலங்கையின் இன்றைய நிலவரம் குறித்த இந்தோனேசிய அதிகாரிகளுக்கு விளக்கிக் கூறியதுடன் தமிமீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் மேற்கொண்டுவரும் யுத்த நடவடிக்கையால் தமிழ் மக்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லையெனத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ, வடக்கில் வாழும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளையும் ஜனநாயகத்தையும் விடுதலைப் புலிகள் வழங்க மறுத்து வருவதாகவும் இந்தோனேசிய அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
யுத்த முன்னெடுப்புகளால் பொதுமக்கள் பாதிக்கப்படாமை காரணமாக மக்கள் இராணுவத்தின் மீது நன்மதிப்பை வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply