இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று! தப்புமா தலை போகுமா?

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று நடத்தப்படவுள்ளது.இதன்பொருட்டு அனைத்து முன்னேற்பாட்டு நடவடிக்கைகளும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவிக்கின்றார்.
இதன்பொருட்டு அனைத்து முன்னேற்பாட்டு நடவடிக்கைகளும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவிக்கின்றார்.

இதேவேளை ஜெனீவா பிரேரணை குறித்து நேற்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்புக்கள் சிலவற்றில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

அமெரிக்க ஏகாதிபத்தியவாத நடவடிக்கையின் முதல் கட்டமாகவே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர குறிப்பிட்டார்.

அமெரிக்கா மாத்திரமன்றி இந்தியாவும் இந்த சூழ்ச்சிக்கு உடந்தையாக இருக்கின்றது என அவர் கூறினார்.

கடந்த இரு தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த சூழ்ச்சியின் இறுதி பிரதிபலன்களையே இலங்கை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் தீர்மானம் எதனையும் இந்த நடவடிக்கையின் மூலம் மேற்கொள்ள முடியாதெனவும் அது தொடர்பில் சட்டங்களை நிறைவேற்றவும் முடியாது என்றும் தேசிய தொழிற்சங்க நிலையத்தின் தலைவர் தலைவர் கே.டீ.லால்காந்த் குறிப்பிட்டார்.

எனினும் எதிர்காலத்தில் ஐ.நா பாதுகாப்புப் பேரவை வரை இந்த விடயத்தை கொண்டுசெல்வதற்கான ஒரு மார்க்கத்தை இதன்மூலம் ஏற்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பு நிலவியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply