பிரபாகரனைச் சரணடைய கேபி கூறியும் அவர் கேட்கவில்லை : கோத்தபாய
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சரணடையுமாறு குமரன் பத்மநாதன் கோரியிருந்தார் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருப்பதாக ஆங்கில இணையத் தளம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் கூறியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அச்செய்தியில் மேலும்,
“இராணுவத்தினரிடம் சரணடையுமாறு பிரபாகரனிடம், கே.பி கோரியிருந்தார். எனினும் அந்தக் கோரிக்கையை பிரபாகரன் ஏற்றுக்கொள்ளவில்லை.
நாட்டில் எத்தனையோர் நல்ல பல செயற்திட்டங்களை நாம் மேற்கொண்டிருந்தும் எம் மீது வீணான பழி சுமத்தப்படுகிறது” என்று அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply