தைப்பொங்கல் உற்சவத்தின் குறிக்கோளின் பிரகாரம் உயிரினங்கள், கால்நடைகள் என்பவற்றுக்கும் இரக்கம், கருணைகாட்டல்:பொங்கல் வாழ்த்தில் பிரதமர்
இந்து மரபுகளின் பிரகாரம் தைப் பொங்கல் என்பது வருடப் பிறப்பு நாளாகும். எனவே இந்து புதுவருட மானது இன்றைய தினத்திலிருந்தே ஆரம்பிக்கின்றது. செளபாக்கியம், மகிழ் ச்சி, அதிர்ஷ்டம் என்பவற்றின் ஆரம்பமாக ‘தை’ மாதத்தின் பிறப்பை இந்து பக்தர்கள் குறிப்பிடுகின்றனர் என பிரதமர் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள் ளார். இந்த விழாவை பெரும்பாலும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட மக்களின் சமய விழாவாகவும் குறிப்பிட முடியும்.
அறுவடை செய்தவற்றை முதலில் கடவுளுக்கு பூசை செய்யும் பழக்கத்தையும் இந்து பக்தர்கள் கொண்டுள்ளனர். தமது வேளாண்மை உணவுக்கு துணைபுரியும் சூரியக் கடவுளுக்காக பாற்சோற்றை பூசை செய்வதும் இங்கு இடம்பெறுகின்ற மற்றொரு நிகழ்வாகும். இவ்விழாவில் பசுமாடும் கண்ணியப்படுத்தப்படுவதுடன், அதற்காகவும் பூசைகள் இடம்பெறுகின்றன.
மற்றொரு வகையில் பார்க்கும் போது தைப்பொங்கல் விழாவினை உயிரினங்கள் மற்றும் சூழலுக்கிடையிலான அமைதியான சகவாழ்வினை பிரதிபலிக்கும் விழா வாகக் குறிப்பிட முடியும். ஜீவகாருண்யம் மற்றும் சூழலை பாதுகாத்தல் என்பன உயரிய மனித பண்புகளாகும். இந்த நற் பண்புகளைப் பேணும் இந்து சமூகமானது, சமாதானமாகவும் சகோதரத்துவத்துடனும் வாழ்வதற்கு விரும்பும் ஒரு சமூகமாகும். ஈவிரக்கமற்ற சிறிய அளவான தமிழ் பயங்கரவாதிகளுக்கு இச்சிறந்த நாளிலே நாம் ஒரு செய்தியை வழங்க வேண்டியுள்ளது. அதாவது மதத்தின் பெயரால் பயங்கரவாதத்தை கைவிட வேண்டும் என்பதாகும்.
தைப்பொங்கல் உற்சவத்தின் குறிக் கோளின் பிரகாரம் உயிரினங்கள், கால்நடைகள் என்பவற்றுக்கும் இரக்கம், கருணைகாட்டல் என்பவற்றை முன்மாதிரி யாகக் கொண்டு எமது நாட்டில் வாழும் பல்வேறு இனங்களுக்கிடையே பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் சகோதரத்துவத்தை விருத்தி செய்து கொள்வதற்கும் நாம் அனைவரும் சக்திபெற வேண்டுமென பிரார்திப்போம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply