எமது இராஜதந்திரமே ஜெனீவா நிலைப்பாட்டுக்குக் காரணம்: கூட்டமைப்பு
ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடரில் அமெரிக்காவினால் முன்வைக் கப்பட்ட இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் என்பவற்றை ஊக்குவிக்கும் பிரேரணை நிறைவேற்றப்பட்டதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வர வேற்பதாக அறிவித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பானது மனித உரிமை கூட்டத்தொடரின் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் என்பவற்றை ஊக்குவிக்கும் பிரேரணையின் நிறை வேற்றத்தினை தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான முதற்கட்ட படியாக கருதுகிறது.
19 ஆவது மனித உரிமை கூட்டத் தொடரின் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் என்பவற்றை ஊக்குவிக்கும் பிரேரணையின் நிறைவேற்றமானது தமிழ் மக்கள் நேச நாடுகளுடன் நெருங்கிய தொடர்பை பேண வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.
இப்பிரேரணையானது நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்யும் முகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக இப்பிரேரணையோடு தொடர்பு பட்டிருந்த நாடுகளுடன் கூட்டத் தொடருக்கு முன்னரும் கூட்டத் தொடரின் போதும் பல்வேறு தொடர்பாடல்களையும் கலந்துரையாடல்களையும் நடத்தியிருந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணையை நிறைவேற்றுகிற தருணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் பொறுப்புடனும் இராஜதந்திர தீர்க்கதரிசனத்துடனும் செயற்பட்டதென்பது இப்பொழுது எமது மக்களுக்கு தெளிவாகியிருக்குமென்று நாம் நம்புகிறோம் என கூட்டமைப்பினால் வெளியிடப்பட் டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply