சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் துரைரெட்னத்துக்கும் இடையில் சந்திப்பு

ஈ.பி.ஆர்.எல்.எப்.அணியின் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் கிழக்குமாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா அணியின் மட்டு.-அம்பாறை மாவட்டதலைவர் இரா.துரைரெட்னத்துக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று மட்டக்களப்பில்இடம்பெற்றுள்ளது.

ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியை ஒருங்கிணைக்கும் திட்டம் ஒன்றை மேற்கொண்டுமட்டக்களப்புக்கு வருகைதந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.சுரேஸ்அணியின் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கட்சிஉறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடிவருகின்றார்.

இந்த சந்திப்பில் அக்கட்சியின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்திஆனந்தனும் கலந்துகொண்டார்.

இந்த சந்திப்புக்குறித்து கருத்து தெரிவித்த மாகாண சபை உறுப்பினர்இரா.துரைரெட்னம்

ஈ.பி.ஆர்.எல்.எப்.சுரேஸ் அணியின் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும்தனக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில்தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும்கலந்துரையாடிதாக தெரிவித்தார்.

அத்துடன் எதிர்காலத்தில் மக்களின் பொதுவான நலன் தொடர்பில் இரு கட்சிகளும்இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோதும் இதுவரையில் அது தொடர்பில்முடிவெதுவும் எட்டப்படவில்லையெனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுவதற்கு தாங்கள் முடிவெடுத்துள்ளதாகம் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply