தமிழக அரசியல்வாதிகள் நிதானமாக கருத்துக்களை வெளியிட வேண்டும் : சுமந்திரன்

இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்கு தமிழகம் வழங்கி வரும் ஆதரவு பாரட்டுக்குரியது என்ற போதிலும், சில அரசியல்வாதிகள் நிதானமாக கருத்துக்களை வெளியிட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவிவித்துள்ளார். தமிழ் அரசியல்வாதிகள் உலகிற்கு சொல்லும் செய்திகள் மிகவும் காத்திரமானதாக அமைய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தவறான கருத்துக்களின் மூலம் சர்வதேச சமூகத்தின் ஆதரவினை இழக்க நேரிடலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி தனித் தமிழீழம் பற்றி கருத்து வெளியிட்டிருந்தார். நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம் சர்வதேச ஆதரவு திசை திரும்பக் கூடும் என சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நடைமுறைச் சாத்தியமானதும், நியாயமானதுமான கோரிக்கைகளை முன்வைக்க தமிழ்த் தலைவர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஆக்கபூர்வமாக முன்நகர்வதற்கு இலங்கைக்கு கிடைக்கப் பெற்ற சந்தர்ப்பமாக கருதப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
 
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கையில் பெரிதாக கவனம் செலுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், ஏனைய பல காத்திரமான அம்சங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply