இலங்கைக்கு பயன்தரும் வகையில் இராஜதந்திர உறவில் மாற்றம் : ஜீ. எல். பீரிஸ்

இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் வாக்களித்த நாடுகள் தொடர்பில் இலங்கையின் சர்வதேச கொள்கையில் மாற்றம் ஏற்படாது. ஆனால், இலங்கைக்கு முழுமையான பிரயோசனம் கிடைக்கக் கூடியவாறு இராஜதந்திர உறவில் மாற்றம் செய்யவும் ஆசிய, ஆபிரிக்க நாடுகள் தொடர்பில் அதிக முக்கியம் வழங்கவும் கவனம் செலுத்த உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று நடை பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரி வித்த அவர் ஜெனீவா மாநாட்டுக்கு முன்னரே ஜனாதிபதியினால் எடுக்கப் பட்ட முடிவின்படி இராஜ தந்திர உறவில் மாற்றம் செய்யப்படும். 1948 இன் பின்னர் முன்னுரிமை வழங்க வேண்டிய நாடுகள் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை.

ஆபிரிக்கா கண்டத்தில் 4 தூதரகங்களே உள்ளன. பல ஆபிரிக்க நாடுகள் எமக்கு ஒத்துழைப்பு வழங்கின. எனவே இந்த நிலை மாற்றப்பட வேண்டும். ஆசியா கண்டத்தில் இந்தியா தவிர சகல நாடுகளும் எமக்கு ஆதரவு வழங்கின.

ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்கனவே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால் மேலும் முக்கியத்துவம் வழங்க அவசியமில்லை. வேறு நாடுகளுக்கு முக்கியம் வழங்க வேண்டும். கட்டம் கட்டமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply