பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் இழப்புக்களை ஏற்க முடியாது : பிளக்

தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாத இல்லாதொழிப்பு நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ளக்கூடியது என்ற போதிலும், பொதுமக்கள் இழப்புக்களை அனுமதிக்க முடியாது என தற்போதைய அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஒ பிளக் தெரிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
 
பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனினும், அதற்காக பொதுமக்கள் கொல்லப்படவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என பிளக், தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகளினால், அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை அமைதியான
முறையில் சரணடையச் செய்வதற்கு அமெரிக்கா முயற்சி மேற்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
விசேட பிரதிநிதி ஒருவரின் ஊடாக சரணடைதல் தொடர்பில் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என பிளக் குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும், விசேட பிரதிநியை புலிகள் பணயக் கைதியாக சிறைபிடிக்க மாட்டார்கள் என்பதனை எவ்வாறு உறுதி செய்ய முடியும் என பெசில் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
 
பொதுமக்கள் உயிரிழப்புக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டமென பிளக் வலியுறுத்தியுள்ளார்.
 
விசேட பிரதிநிதி ஒருவரை யுத்த வலயத்திற்குள் அனுப்பி பிரபாகரனுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் கோரிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.
 
2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் திகதி இந்தக் குறிப்பு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.48 மணித்தியாலங்களுக்கு படையினரின் நடவடிக்கைகளை தற்பாதுகாப்பு நோக்கங்களுக்கு மட்டும் வரையறுக்க முடியும் என இலங்கை அரசாங்கம் உறுதிமொழியளித்திருந்ததாக பிளக் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply